236 பயணிகளுடன் பறந்த விமானத்தில் தீ? அவசரமாக தரையிறக்கம்
236 பயணிகளுடன் நேபாளத்திலிருந்து துருக்கி நோக்கி பயணித்த விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு உள்ளூர் நேரப்படி மதியம் 2.49 மணியளவில், தர்கிஷ் ஏர்லைன்ஸ் சொந்தமான விமானம் புறப்பட்டது, இதில் 236 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது என்ஜின் தீப்பிடித்து எரிவதாக விமான அறிவித்தார், உடனடியாக PAN PAN என்ற சமிக்ஞை அனுப்பப்பட்டது.
தொடர்ந்து கொல்கத்தாவின் சுபாஷ் சந்திர போஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்க விமானி அனுமதி கோரினார்.
அனுமதி வழங்கப்பட்டவுடன் கொல்கத்தா விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தொடர்ந்து 236 பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் தீவிர சோதனைகள் நடந்து வருவதாகவும், பயணிகள் வேறொரு விமானம் மூலம் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
