நெருப்பில் பலியான மனைவி, தாய் - சம்பவத்தை மறைத்து மகள் திருமணத்தை நடத்திய தந்தை
தீ விபத்தில் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தது தெரியாமல் பெண்ணின் திருமணம் நடந்துள்ளது.
தீ விபத்து
ஜார்க்கண்ட், ஜொரப்ஹடக் பகுதியை சேர்ந்தவர் சுபாத் லால். தனது மகள் ஸ்வாதி, மனைவி மற்றும் பெற்றோருடன் டுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்தார். இதனிடையே, ஸ்வாதிக்கு பெங்களூருவில் பணியாற்றி வரும் கவுரவ் என்ற இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தொடர்ந்து மகளின் திருமணத்திற்காக ஏற்பாடுகள் நடந்தன. சடங்குகளுக்காக ஸ்வாதி அதிகாலையிலேயே திருமண மண்டபத்திற்கு தோழிகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் 2ஆம் தளத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மகள் திருமணம்
மளமளவென பரவிய தீ 3-வது மற்றும் 4வது தளத்திற்கு பரவியது. இதில், சுபாத் லால் சிறு காயங்களுடன் தீ விபத்தில் இருந்து தப்பித்தார். ஆனால், அவரது மனைவி, தாய், தந்தை குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் தீயில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இதனை அறிந்த உறவினர்கள் மணமகளிடம் எதையும் கூறவில்லை. தொடர்ந்து தந்தை மண்டபத்திற்கு வந்துள்ளார். ஸ்வாதி தாய், பாட்டி குறித்து கேட்க உறவினர்கள் அதனை சமாளித்து திருமணத்தை நடத்தியுள்ளனர். அதன்பின் இதுகுறித்து ஸ்வாதியிடம் கூறவே அவர் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.