மெக்ஸிகோவில் பயங்கர தீ விபத்து...! 300 வீடுகள் தீயில் எரிந்து நாசம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
மத்திய மெக்சிகோவின், அகுவாஸ்கலியென்டெஸில் எரிபொருள் டிரக் ஒன்று, சரக்கு ரயில் மீது மோதியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோவில் பயங்கர தீ விபத்து
மத்திய மெக்சிகோவின், அகுவாஸ்கலியென்டெஸில் எரிபொருள் டிரக் ஒன்று, சரக்கு ரயில் மீது மோதியதால் பயங்கர தீ விபத்தில், ஒரு பெரிய ரயில் பாதை மற்றும் 300க்கும் மேற்பட்ட வீடுகளை தீயில் கருகி நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்தில் கரும்புகைகள் எழுந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினர்கள் சுமார் 200 மேற்க்கும் மேற்பட்டவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

BREAKING: Cargo train drives through flames after crashing into fuel truck in central Mexico, setting dozens of homes on fire pic.twitter.com/QLc4eV6xhk
— BNO News (@BNONews) October 21, 2022