பள்ளி விடுதியில் தீ விபத்து - 17 மாணவர்கள் பலி!
பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து
ஆப்பிரிக்கா, கவுரா நமோடா நகரில் இஸ்லாமிய மதப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கி மதப்பாடம் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்துள்ளனர்.
17 பேர் பலி
விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் உடனே விரைந்து வந்து விடுதியில் சிக்கி மாணவர்களை மீட்டனர். இருப்பினும் பயங்கர விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தற்போது இதுகுறித்து அதிகாரிகல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.