100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம்
100 க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டுள்ளனர்.
காங்கோ கலவரம்
மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில், அதன் அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சி அமைப்பால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது.
இந்த M23 கிளர்ச்சி அமைப்பு, கடந்த வாரம் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரான கோமாவை கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
உயிரோடு எரிக்கப்பட்ட பெண்கள்
கோமா மற்றும் அதன் அண்டை நகரான புகாவுவில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
எம்23 கோமா நகரை கைப்பற்றியதையடுத்து, கோமாவின் மிகப்பெரிய சிறையான 'மன்ஸென்ஸே' சிறைச்சாலையில் ஜனவரி 27 ஆம் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சிறையில் இருந்த 4000 கைதிகள் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த அசாதரண சூழ்நிலையை பயன்படுத்தி சிறையில் இருந்த 100க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதோடு, பெண் கைதிகள் இருந்த பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைதி காக்கும் படையின் துணைத் தலைவர் விவியன் வான் டி பெர்ரே தெரிவித்துள்ளார்.