Fire Haircut: தீப்பிடித்து எரிந்த தலை..பலத்த காயங்களுடன் இளைஞர் - பதறவைக்கும் வீடியோ

Gujarat Viral Video
By Sumathi Oct 27, 2022 03:00 PM GMT
Report

ஃபயர் ஹேர்கட் மூலம் முடி வெட்டியதில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.

ஃபயர் ஹேர்கட்

குஜராத், வல்சாத் மாவட்டத்திலுள்ள வாபி நகர் சலூன் கடையொன்றில் முடிவெட்டுவதற்காக 18 வயது இளைஞர் சென்றிருக்கிறார். அங்கு, முடிவெட்டுபவரால், அந்த இளைஞருக்கு fire haircut முறையில் சிகையலங்காரம் செய்யும்போது, திடீரென நெருப்பு அந்த இளைஞரின் மேல் பரவிக்கொண்டது.

Fire Haircut: தீப்பிடித்து எரிந்த தலை..பலத்த காயங்களுடன் இளைஞர் - பதறவைக்கும் வீடியோ | Fire Haircut Attempt Goes Wrong Gujarat Man

இதில், கழுத்து மற்றும் மார்பில் பலத்த தீக்காயமடைந்த அந்த இளைஞர், அருகிலுள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி கரம்சிங் மக்வானா,

விபரீதம்

``இதில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பெற நாங்கள் முயற்சித்துவருகிறோம். fire haircut-காக அவரின் தலையில் ஒருவித ரசாயனம் தடவப்பட்டதால், அந்த நபரின் உடலில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

எனவே fire haircut-காக எந்த வகையான ரசாயனம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.