சாகசம் செய்து கொண்டிருக்கும் போது திடீர் விபத்து: உடல் கருகி மரணம்
investigation
By Fathima
புதுக்கோட்டையில் சாகசம் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரதவிதமாக தீப்பிடித்ததில் இளைஞர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 14ம் தேதி கராத்தே நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது, அப்போது 19 வயது மதிக்கத்தக்க பாலாஜி என்ற வாலிபர் கையில் துணியை கட்டிக்கொண்டு தீ பற்றவைத்து சாகசம் செய்து கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக ஆடையில் தீ பற்றிக்கொண்டு உடல் முழுவதும் பரவியது, இதனால் படுகாயம் அடைந்த பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.