ஓடும் ரயிலின் கழிவறையில் விசித்திர சத்தம்..நொடியில் நடந்த பயங்கரம்- அதிர்ந்த அதிகாரிகள்!
ஓடும் ரயிலின் கழிவறையில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கர் ரயில் நிலையத்திற்கு பிகானேர் வழியாக லால்கர் செல்லும் பயணிகள் ரயில் ஒன்று வந்துள்ளது. சுமார் இரண்டு மணியளவில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் உள்ள கழிவறையில் தீ பிடித்து எரிந்தது.
மேலும் புகை கிளம்பியுள்ளது. இதனைக் கண்ட பயணிகள் பீதியடைந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். அவர்களில் சிலர் ரயிலிலிருந்து குதித்து ஓடினர். இதனையடுத்து இந்த சம்பவம், குறித்து ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து காவல்துறையினர் கழிவறையின் கதவை உடைத்து தீயை அணைத்தனர்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த இந்த சம்பவத்தால் சூரத்கர் ரயில் நிலையத்திலிருந்து 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டது.
கழிவறை
இது குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் பீடி அல்லது சிகரெட்டை யாரோ கழிவறையின் குப்பைத் தொட்டியில் வீசியதால் தீப்பிடித்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ரயிலுக்குள் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனையும் மீறி பயணிகள் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்களால் கவனமாக இருக்காவிட்டால், பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.