பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன விஜய் - மீறியதால் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்
விஜய் பிறந்த நாள் கொண்டாடத்தின் பொது சிறுவனின் கையில் தீ பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் திரைத்துறையினர், மற்றும் அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் பிறந்த நாள் அன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வது வழக்கம்.
தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 க்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனே கள்ளக்குறிச்சி சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்தார் தவெக தலைவர் விஜய்.
பிறந்த நாள் கொண்டாட்டம்
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நீலாங்கரையில் விஜய் ரசிகர்கள் சார்பில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது சாகசம் செய்ய முயன்ற சிறுவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.