இத்தாலியில் பயங்கர தீ விபத்து - நகரமே புகைமூட்டமானது!

Italy Fire
By Vinothini May 13, 2023 10:19 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 இத்தாலியன் மிலன் நகரின் மையப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புகைமூட்டம்

இத்தாலியன் மிலன் நகரின் மையப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

fire-accidnent-in-italy

இந்த தீ விபத்தினால் சாலையில் இருந்த பல கார்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. இதனால் எழுந்த கருப்பு புகைமூட்டம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைய்ப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

முதற்கட்ட தகவலின்படி, நகரின் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்று வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை

இந்நிலையில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, தொடர்ந்து, அருகில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியும் நடந்து வருகிறது.

மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்பொழுது, இந்த விபத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.