உளுந்தூர்பேட்டை அருகே பெட்ரோல் பங்க் வளாகத்தில் பயங்கர தீ விபத்து - பரபரப்பு சம்பவம்
Fire
Accident
By Nandhini
உளுந்தூர்பேட்டை அருகே பெட்ரோல் பங்க் வளாகத்தில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க் வளாகத்தில் தீ விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே பெட்ரோல் பங்க் வளாகத்தில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்ததால் பல கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் கரும் புகை வெளியேறியது. இதனால், அப்பகுதி புகையால் சூழ்ந்து காணப்பட்டது.
இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறை வீரர்களும் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.