பிரபல தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. சிக்கிய 7 பேர் பலி - என்ன நடந்தது?
தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து..
திண்டுக்கல் மாவட்டம், நேருஜி நகர் திருச்சி சாலையில் சிட்டி எனப்படும் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. தரைதளம் தொடங்கி மொத்தம் 4 மாடி தளங்களை கொண்டு இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மருத்துவமனை வரவேற்பு அறையில் திடீரென பலத்த சத்தம் எழுந்தது. தொடர்ந்து மலமலவென தீ பரவி தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக பிடித்த தீ சிறிதுநேரத்தில் தரைதளம் முழுவதும் பரவியது.
என்ன நடந்தது?
இந்த தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீவிரமாக மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். நோயாளிகள் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆபத்தறியாமல் லிஃப்ட் வழியாக கீழே இறங்க முயன்றனர். ஆனால் லிஃப்ட்டுக்குள் சிக்கி கொண்டனர்.
லிஃப்டை உடைத்து தீயணைப்பு படைவீரர்கள் அவர்களை மீட்டனர். இதனிடையே, திண்டுக்கல் பால திருப்பதி பகுதியைச் சேர்ந்த மணி முருகன் பலியானார். அவருக்கு உதவியாக வந்த அவரது தாய் மாரியம்மாள், மூன்று வயது குழந்தை உட்பட 7 பேர் தீயில் கருகி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மறுபுறம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருமணி நேரமாக போராடி அனைவரையும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.