சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து - அலறியடித்து ஓடிய மக்கள்!
தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
தீ விபத்து
கும்பகோணத்தில் உள்ள திருநாராயணபுரம் சாலையில் தி சென்னை சில்க்ஸ் துணிக்கடை இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிகின்றனர். நேற்று ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்ததால் ஏராளமானோர் அங்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் அந்த கடையின் முகப்பு பகுதியில் புகை கிளம்புவதை சாலையில் இருந்த மக்கள் கண்டனர். உடனே அந்த நிறுவனத்தின் ஊலியர்களுக்கு தெரிவித்தனர், பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து கடையில் இருந்து தப்பியோடினர்.
விசாரணை
இந்நிலையில், எதிர்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழகம், தனியார் மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்தவர்களும் அலறி அடித்து வெளியேறினர். இந்த சம்பவத்தில் அங்கு பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் திருவிடைமருதூர் தீயணைப்பு துறை சேர்ந்த 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடித்து, தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சுமார் 50 அடி உயரத்திற்கு மேல், தீ பரவியதால் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக மாறியது. இது குறித்து போலீசார் எளிதில் தீ போற்றக்கூடிய பொருட்கள் மற்றும் மின் சாதனங்களால் தீ பற்றியிருக்கும் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.