டாடா தொழிற்சாலையில் தீ விபத்து - அதிகாலையில் நடுங்க வைத்த சம்பவம்!
ஓசூர் அருகே செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
டாடா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திம்ஜேப்பள்ளி ஊராட்சி கூத்தனப்பள்ளி பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று (செப்.28) காலை தொழிற்சாலையில் உள்ள ஆனோ கெமிக்கல் பிளாண்டில் திடிரென தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கரும்பு சூழ்ந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர் . இந்த சம்பவம் குறித்து ஓசூரில் உள்ள தேன்கனிக்கோட்டை தீயணைப்பு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்து
உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த அவர்கள் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் அப்பகுதியிலிருந்த 3 ஆயிரம் தொழிலாளர்களை மீட்டுப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் அணைக்க்பட்டது.மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் மற்றும் பொருட்கள் சேதம் குறித்து ராயக்கோட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .