ராகுல் காந்தி மீது பாய்ந்த வழக்கு - காவல் துறை நடவடிக்கை!

Indian National Congress Rahul Gandhi India
By Swetha Dec 20, 2024 06:18 AM GMT
Report

ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.

ராகுல் காந்தி மீது பாய்ந்த வழக்கு - காவல் துறை நடவடிக்கை! | Fir Case Is Filed Against Rahul Gandhi

இந்த விவாதத்தின் போது ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசினார். அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது அதே இடத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்பேத்கரை அவமதித்தாக கூறி

ராகுல் காந்தி தள்ளி விட்டார்; பாஜக எம்பி மண்டை உடைப்பு - நாடாளுமன்றத்தில் பரபரப்பு

ராகுல் காந்தி தள்ளி விட்டார்; பாஜக எம்பி மண்டை உடைப்பு - நாடாளுமன்றத்தில் பரபரப்பு

வழக்கு

பாஜக எம்பிக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரே இடத்தில் இரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி, ராகுல் காந்தி எம்பி ஒருவரை என் மீது தள்ளி விட்டார்" என பலத்த காயமடைந்து ரத்தம் வழிய கூறினார்.

ராகுல் காந்தி மீது பாய்ந்த வழக்கு - காவல் துறை நடவடிக்கை! | Fir Case Is Filed Against Rahul Gandhi

இந்த புகார் அளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அதன்படி ராகுல் காந்தி மீது சட்டப்பிரிவு 115 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்),

117 (தன்னிச்சையாக கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 125 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவது), 131 (குற்ற சக்தியைப் பயன்படுத்துதல்), 351 ஆகியவற்றின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.