அரை நிர்வாணத்தில் முத்தம்? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பின்லாந்து பிரதமர்!

Viral Video Finland
By Sumathi Aug 26, 2022 07:47 AM GMT
Report

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மீண்டும் புகைப்படம் ஒன்றினால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சன்னா மரின்

பின்லாந்து நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் சன்னா மரின். உலகிலேயே மிகவும் இளமையான பிரதமராக கருதப்படும் இவர்க்கு வயது 34.

அரை  நிர்வாணத்தில் முத்தம்? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பின்லாந்து பிரதமர்! | Finlands Pm Sanna Marin Caught Into Another Contro

ஜனநாயகக் கட்சியின் தலைவராக உள்ள சன்னா மரின் கடந்த வாரம் தனது வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

போதை மருந்து

அந்த வீடியோவில் சன்னா மரின் உற்சாகமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும், இதனை பார்த்த பலரும், பிரதமர் போதை பொருளை பயன்படுத்தி உள்ளாரா என்ற சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பினர்.

அரை  நிர்வாணத்தில் முத்தம்? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பின்லாந்து பிரதமர்! | Finlands Pm Sanna Marin Caught Into Another Contro

இதனைத் தொடர்ந்து, சன்னா மரின் போதை மருந்தை பயன்படுத்தினாரா என்பதை அறிய பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் அவர் எந்த விதமான போதை பொருளையும் பயன்படுத்தவில்லை என்ற நெகடிவ் ரிசல்ட் வந்தது.

புகைப்படம்- சர்ச்சை

இந்த சர்ச்சை முடிவதற்குள்ளேய தற்போது மீண்டும் பிரச்சனையில் சிக்கியுள்ளார் சன்னா மரின். இம்முறை அவரின் இரு தோழிகள் அதிகாரப்பூர்வ இடத்தில் மேலாடையின்றி கையில் பின்லாந்து என்ற போர்டை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொள்கின்றனர்.

இதனை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டிருந்தனர். இந்த புகைப்படத்தில் பிரதமர் சன்னா மரின் இடம்பெறவில்லை, இருப்பினும் அந்த புகைப்படம் அவரது வீட்டில் எடுக்கப்பட்டதால் தற்போது இந்த விஷயம் சர்ச்சையாகி உள்ளது.

மன்னிப்பு கேட்ட பிரதமர்

இது குறித்து பேசியுள்ள சன்னா மரின், அந்த புகைப்படம் தனது வீட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தோழிகளின் அப்படியான புகைப்படத்தை எடுத்திருக்கவே கூடாது.

ஜூலையில் நடந்த ஒரு பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ என்றார். மேலும் பேசிய அவர், "நானும் மனுஷிதான். எனக்கும் சந்தோஷமாக இருக்க உரிமை உள்ளது. இந்த பார்ட்டி எல்லாம் என்னுடைய தனிப்பட்ட நேரத்தில் நடக்கக்கூடியது.

இதனால் என்னுடைய வேலை பாதிக்கப்பட்டதில்லை. ஒருநாள் வேலையைக் கூட நான் தவறவிட்டதில்லை" என்றார். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சனம் செய்ய கூடாது என ஒரு சிலர் ஆதரவாகவும், மற்ற சிலர் அவருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.