போதையில் போட்ட குத்தாட்டத்தால் பிரதமருக்கு வந்த சோதனை!
பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சன்னா மரீன்
பின்லாந்து ஆட்சியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக சன்னா மரீன் பதவி வகிக்கிறார். 34 வயதாகும் இவர் உலகின் மிகைளவயது பிரதமர் என்ற பெயர் பெற்றவர்.
இந்நிலையில், இவர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தி போதையில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. பெரிய சர்ச்சையயும் கிளப்பியது.
போதையில் ஆட்டம்
மேலும் உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என்ற கண்டன குரல்களும் தொடர்ந்து வெளிவந்தது. அந்த பார்ட்டியில் மதுவை தவிர வேறு போதை பொருட்களை பயன்படுத்தவில்லை எனவும், நடனமாடியது, பார்ட்டி செய்தது எல்லாம் சட்டப்படியான விஷயங்கள் என்றும் சன்னா மரீன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இவர் போதைமருந்து பரிசோதனை எடுக்க வேண்டும் என அந்நாட்டின் தலைவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதை மருந்து பரிசோதனை
இதுகுறித்து சன்னா மரின் கூறுகையில், “சமீப நாட்களாக நான் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட இடத்தில் இருந்தேன் அல்லது நானே போதைப்பொருள் பயன்படுத்தினேன் என்று மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
Finland’s Prime Minister Marin Sanna partying video was leaked. My only question is. Why wasn't I invited.pic.twitter.com/1rIZF6Ylp4
— Altavista ???? (@na_intel) August 18, 2022
Finland’s Prime Minister Marin Sanna partying video was leaked. My only question is. Why wasn't I invited.pic.twitter.com/1rIZF6Ylp4
— Altavista ???? (@na_intel) August 18, 2022
இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்று நான் கருதுகிறேன், போதைப்பொருள் சோதனைக்கான கோரிக்கை நியாயமற்றது என்று நான் கருதுகிறேன். ஆனாலும், எனது சொந்த சட்டப் பாதுகாப்பிற்காகவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும்,
நான் இன்று போதை மருந்து பரிசோதனை செய்துள்ளேன், அதன் முடிவுகள் வர சுமார் வாரகாலம் ஆகலாம் என தெரிவித்துள்ளார்.