உலகிலேயே மகிழ்ச்சியான நாடு: இதற்குத் தான் முதலிடம் - அப்படியென்ன பின்னணி

India Finland Denmark Iceland
By Sumathi Mar 21, 2023 05:43 AM GMT
Report

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

மகிழ்ச்சியான நாடு

உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ல் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை, ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிடுவது வழக்கம்.

உலகிலேயே மகிழ்ச்சியான நாடு: இதற்குத் தான் முதலிடம் - அப்படியென்ன பின்னணி | Finland Tops World Happiest Country Ranking

அதன்படி இந்த ஆண்டு தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே 2 மற்றும் 3ஆம் இடத்தை பிடித்துள்ளன.

பின்லாந்து முதலிடம்

இதில், இந்தியாவுக்கு 125வது இடம். அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம் மற்றும் இலங்கையை விட பின்தங்கி உள்ளது. தலிபான் ஆட்சி நடக்கும், ஆப்கானிஸ்தானுக்கு கடைசி இடம்.

உலகிலேயே மகிழ்ச்சியான நாடு: இதற்குத் தான் முதலிடம் - அப்படியென்ன பின்னணி | Finland Tops World Happiest Country Ranking

இந்த ஆய்வு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய- காரணிகள் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.