நண்பர்களாக இருப்போம் - திடீரென கணவரை பிரியும் இளம் பிரதமர்!

Finland Divorce
By Sumathi May 12, 2023 11:30 AM GMT
Report

பிரதமர் சன்னா மரின் விவாகரத்திற்குப் பதிவு செய்துள்ளார்.

 சன்னா மரின்

ஃபின்லாந்தின் பிரதமராக இருப்பவர் சன்னா மரின். 37 வயதில் பதவியேற்ற இவருக்கு உலகின் மிக இளம்வயது பிரதமர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. மரினுடைய சமூக ஜனநாயகக் கட்சி கடந்த மாதம் ஃபின்லாந்தின் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

நண்பர்களாக இருப்போம் - திடீரென கணவரை பிரியும் இளம் பிரதமர்! | Finland Pm Announces Divorce With Husband

இதற்கிடையில், மரினுக்கும், மார்கஸுக்கும், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில், சன்னா பதிவிட்ட இன்ஸ்டா பதிவொன்று வைரலாகி வருகிறது.

விவாகரத்து

அதில், ``19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். நாங்கள் எங்கள் இளமைப் பருவத்தில் ஒன்றாக வாழ்ந்தோம், ஒன்றாக முதிர்ச்சியடைந்தோம்,

நண்பர்களாக இருப்போம் - திடீரென கணவரை பிரியும் இளம் பிரதமர்! | Finland Pm Announces Divorce With Husband

எங்கள் அன்பான மகளுக்கு ஒன்றாகப் பெற்றோராக வளர்ந்தோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 3 வருட திருமண வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்.