மகளிர் உரிமைத் தொகை பெற பயனாளர்களின் கைவிரல் ரேகை கட்டாயம் - தமிழக அரசு..!
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரேசன் கார்டில் உள்ள 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம்.
இவர்களுக்கு ரூ.1000 இல்லை
முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பணம் பெற தகுதி இல்லை.
மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் விண்ணப்பம் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்.
ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கும் ரூ.1000 பணம் கிடைக்காது.
மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் பல பேர் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.
இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளியவர்கள், சாமானிய மக்களுக்குத்தான் இந்த ரூ.1000 உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக 8 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கைரேகை கட்டாயம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அனைத்து ரேசன் கடைகளிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 17-ம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.