ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த விவகாரம்; யாருடையது..? வெளியான பகீர் தகவல்!
ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனித விரல்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சமீபத்தில் ஆன்லைன் டெலிவரி மூலம் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அதனை திறந்து பார்த்தபோது அந்த ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்ட அந்த விரல்,
டி.என்.ஏ பரிசோதனை
தற்போது யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சமீபத்தில் ஐஸ்கிரீம் ஆலையில் பணிபுரிந்து வந்த ஒருவர், அங்கு நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார். இந்நிலையில் அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நபரின் டி.என்.ஏ.வும், ஐஸ்கிரீமில் இருந்த விரலின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போனால் இது குறித்த தகவல் வெளியாகும். எனவே, அதுவரை அதிகாரப்பூர்வமாக ஏதுவும் கூற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.