போலீஸ் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினால் இனி அபராதம் - அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

Government of Tamil Nadu Madras High Court
By Sumathi Mar 21, 2025 05:30 PM GMT
Report

போலீஸ் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினால் அபராதம் விதிக்கலாம் என அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.

அனுமதியின்றி போராட்டம்

இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலையைக் கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கடந்த 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில்

madras high court - tn govt

அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கரன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்ற யோசனை 

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அமைச்சர் சிவசங்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தி உள்ளதாகக் கூறி இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

சங்கிகள் கவனத்திற்கு; இங்கு கூடுதல் விலைக்கு மதுவகை விற்கப்படுவதில்லை - போஸ்டரால் பரபரப்பு!

சங்கிகள் கவனத்திற்கு; இங்கு கூடுதல் விலைக்கு மதுவகை விற்கப்படுவதில்லை - போஸ்டரால் பரபரப்பு!

முன்னதாக வழக்கு விசாரணையின் போது நீதிபதி, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்திற்குச் சுமை ஏற்படுத்துவதற்குப் பதில் உடனடி அபராதம் விதிக்கலாமே என அறிவுரை கூறினார்.