அறிக்கையில் டாஸ்மாக் வாக்குறுதியே கிடையாது - ஒரே போடு போட்ட செந்தில் பாலாஜி
2021 தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் இல்லை என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை
டாஸ்மாக் நிறு வனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் தொடர்பான சட்டவிரோத விவகாரங்களில் டாஸ்மாக் நிறுவனம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள், டாஸ்மாக் ஊழியர்கள், மற்றும் இதில் தொடர்புடைய பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி விளக்கம்
இதற்கிடையில், தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
"திமுக அரசின் சாதனைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், சாட்டையால் கூட அடித்துக்கொண்டார்கள். அப்படியும் எதுவும் நடக்காததால், இறுதியில் சம்பந்தமே இல்லாத இடத்தில் சோதனை நடத்தியுள்ளனர். எந்த எப்.ஐ.ஆரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்று கேட்டதற்கு,
இன்றுவரை பதில் இல்லை. 2021 தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்தும், பூரண மதுவிலக்கு என வாக்குறுதியும் இல்லை. இருப்பினும், 603 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன." எனத் தெரிவித்துள்ளார்.