இனி..பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம் - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

Tamil nadu Greater Chennai Corporation
By Swetha Oct 09, 2024 04:11 AM GMT
Report

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

குப்பை..

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் 7 ஆயிரம் டன் வரையிலான குப்பைகள் அகற்றப்படுகிறது. இதில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் விதிகளை மீறி கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் அபராதத் தொகை ரூ.500 முதல் ரூ.5 ஆயிரமாக மாநகராட்சி உயர்த்தியது.

இனி..பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம் - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை! | Fine For Litterers In Public Places By Corporation

கடந்த 10 நாட்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.2½ லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அபராதத் தொகை விதிக்கும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் – பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் – பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மாநகராட்சி 

அதன்படி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க பயன்படுத்தும் கருவி போல் டிஜிட்டல் கருவியை மாநகராட்சி சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது. அதில் முதற்கட்டமாக 500 கருவிகளை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.

இனி..பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம் - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை! | Fine For Litterers In Public Places By Corporation

இந்த கருவிகள் 15 மண்டலங்களில் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.