பிலிம் ஃபேர்: பல விருதுகளை அள்ளிச்சென்ற புஷ்பா!
புஷ்பா தி ரைஸ் திரைப்படம் பல பிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது.
பிலிம் ஃபேர்
2021 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படம். வசூலில் சாதனை படைத்தது. மேலும் உலக அளவில் ரசிகர்களைப் பெற்றது. இதில், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், அஜய் கோஷ், ஜெகதீஷ் பிரதாப், மைம் கோபி என பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இதில் இடம்பெற்ற 'ஓ சொல்றீயா மாமா' என்ற பாடல் உலக அளவில் பிரபலமானது. இந்நிலையில், தற்போது 67 - வது தென்னிந்திய பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
புஷ்பா
அதில் தெலுங்கில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் 7 விருதுகளை தட்டி சென்றுள்ளது. அந்த வகையில், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பாடகர், சிறந்த பாடகி என மொத்தம் 7 விருதுகளை பெற்றுள்ளது.
மேலும், சூரரைப்போற்று படத்துக்காக இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.