புஷ்பா 2 படத்தில் சாய்பல்லவி…. என்ன கதாபாத்திரம் தெரியுமா ?
புஷ்பா 2 படத்தில் பழங்குடி பெண்ணாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
புஷ்பா 2
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பாண் இந்திய திரைப்படமான புஷ்பா ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சாய்பல்லவி
படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விறு விறுப்பாக தொடங்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அடிக்கடி படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் பரவுவது வழக்கமான ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரபல நடிகையான சாய் பல்லவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். படத்தில் பழங்குடியின பெண்ணாக அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் கதையில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.