சர்ச்சையை கிளப்பும் "தி கேரளா ஸ்டோரி" படத்தின் ட்ரைலர் - கேரளா முதல்வர் கண்டனம்!

Kerala Congress Kerala Pinarayi Vijayan
By Vinothini May 01, 2023 09:00 AM GMT
Report

கேரளாவில் "தி கேரளா ஸ்டோரி" படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனது, தொடர்ந்து முதல்வர் கட்டணம் தெரிவித்துள்ளார்.

திரைப்படம்

கேரளா, சமீபத்தில் "தி கேரளா ஸ்டோரி" எனும் திரைப்பட ட்ரைலர் வெளியானது. இவை சுதிப்தோ சென் இயக்கத்தில், அம்ருத்லால் ஷா தயாரிப்பில் ஹிந்தி மொழியில் உருவாகியுள்ளது. மேலும் இதில், அதா ஷர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர்.

film-the-kerala-story-vijayan-

அதில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் சென்று இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தன. அதனால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படம் மே 5-ல் ரிலீஸ் ஆக உள்ளது. தொடர்ந்து, படத்தை தடை செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும், கேரளாவின் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கேரளா அரசு கண்டனம்

இந்நிலையில், கேரளா மாநில முதல்வரான பின்ராஜ் பினராயி விஜயன், இந்த படத்தை குறித்து, கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

film-the-kerala-story-vijayan-

மேலும் அவர், “ கேரள தேர்தல் அரசியலில் ஆதாயம் அடையவே சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் அவர்களின் கொள்கைகளை பரப்ப இதுபோன்ற படத்தை எடுத்துள்ளனர், என்பது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. வகுப்புவாதத்தை குறிக்கோளாகக் கொண்டு கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை பரப்பும் நோக்கத்துடன் இவ்வாறு செயல்பட்டுள்ளனர்" என்று கூறி, இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.