பிறப்பு, இறப்பு, பதிவு தாமதக் கட்டணம் ரத்து - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Tamil Nadu
Stalin
By mohanelango
தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்கவில்லை.
இதனால் ஆவணங்கள் பதிவு செய்வது போன்ற பணிகள் தாமதமாகியுள்ளன. பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வதில் தாமதமானால் அதற்கு காலதாமத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது கொரோனா முடக்கத்தை கருத்தில் கொண்டு இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் பிறப்பு, இறப்பு, பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது