மனைவி அடிக்குறா - வாழ்க்க வெறுத்து மரத்துல வாழும் விசித்திர கணவன்!

Viral Video Uttar Pradesh Relationship
By Sumathi Aug 27, 2022 11:28 AM GMT
Report

தன் மனைவி அடிக்கடி சண்டை போடுவதாகக் கூறி கணவர் ஒரு மாத காலமாக மரத்தில் வாழ்ந்து வருகிறார்.

மனைவியுடன் சண்டை

உத்தரப் பிரதேசம், கோபகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரவேஷ்(42). இவர் தனது மனைவி எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதாகவும், அடிக்கடி வாய்த்தகராறு இருந்து வருவதாகவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

மனைவி அடிக்குறா - வாழ்க்க வெறுத்து மரத்துல வாழும் விசித்திர கணவன்! | Fight With Wife Up Man Is Living On A Tree

மேலும், சில நேரங்களில் அவர் தன்னை அடிப்பதாகவும் குமுறி உள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சம் சென்ற ராம் தனது மனைவியால் இடத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.

மரத்தின் மேல் வாழ்க்கை

அதன்படி, அதே கிராமத்தில் பனை மரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்துக் கொண்டார். கடந்த ஒருமாத காலமாக அவர் மரத்திலேயே வாழ்ந்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் அவரை கீழே இறங்கி வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவருக்குத் தேவையான உணவை அவரது உறவினர்கள் கயிற்றில் கட்டி மேலே அனுப்பி வைக்கின்றனர். அதனை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

 கீழே வர மறுப்பு

இரவில் மட்டும் கீழே இறங்கி வந்து இயற்கை உபாதையைக் கழித்தல் போன்ற வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் மரத்தில் ஏறிக்கொள்வாராம். இதனால் என்ன செய்வதென்று தெரியாத கிராம மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீஸார் வந்தும் கீழே இறங்க கேட்டுக் கொண்டும் ராம் மறுத்துள்ளார். இதனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பச் சென்றுவிட்டனர். மேலும், கிராமத் தலைவர் தீபக் குமார் இது குறித்துக் கூறுகையில்,

 ஆதங்கம் 

"பனை மரத்திற்கு அருகில் ஏராளமான வீடுகள் இருக்கின்றன. ராம் மரத்திற்கு மேல் இருந்து கொண்டு கீழே இருக்கும் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கிறார் என்று கிராம பெண்கள் புகார் செய்துள்ளனர். இதையடுத்து இது குறித்து போலீஸில் புகார் செய்தோம்.

ஆனால் போலீஸார் வந்து பார்த்து, வீடியோ எடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர்” என ஆதங்கம் தெரிவித்தார்.