பிரியாணியில் லெக்பீஸ் எங்கடா? கொந்தளித்த மாப்பிள்ளை...வெடித்த களேபரம் - viral video!
பிரியாணியில் சிக்கன் கால் இல்லாததால் திருமண விழாவில் களேபரம் வெடித்தது.
பிரியாணியில் லெக்பீஸ்
திருமண விழாக்களிலும் குடும்ப விசேஷங்களிலும் இப்போதெல்லாம் சிக்கன் பிரியாணி விருந்துகள் இருப்பது மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அதிலும் லெக்பீஸ் எனப்படும், பெரிய இறைச்சித் துண்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது இல்லாத பிரியாணி, குஸ்காவாகிவிடும்.
அந்த வகையில், ஒரு திருமணவிழாவில் லெக்பீஸ் இல்லாமல் பிரியாணி வழங்கப்பட்டதால் பெரிய ரகளையே ஏற்பட்டு உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி நகரில் ஒரு திருமண விழா நடைபெற்றுள்ளது. அப்போது, மணமகன் வீட்டாருக்கு வழங்கப்பட்ட விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.
வெடித்த களேபரம்
அதை சாப்பிட்ட சிலருக்கு லெக்பீஸ் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லையாம். இதனால் இளைஞர்கள் அதை ஒரு பெரிய பிரச்சினையாக்கினர். முறையிடலாக தொடங்கிய பிரச்சனை வாக்குவாதம், கைகலப்பாக வளர்ந்து களேபரமானது. ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையும் இறங்கி தங்கள் தரப்பினருக்காக சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பலருக்கும் அடி உதை விழுந்தது. இடையில் சிலர் நாற்காலிகளையும் தூக்கி வீசினர்.இந்த மோதலை யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
बारात में बिरयानी चिकन लेग पीस ना मिलने पर जमकर हुआ बवाल दूल्हे और बारातियों की जमकर पिटाई #Chicken @AshwiniSahaya pic.twitter.com/5nZWZsV5vD
— Raajeev Chopra (@Raajeev_Chopra) June 24, 2024
அது தொடர்பான காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. வலைத்தள காட்சிகளை பார்வையிட்ட போலீசார், புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.