திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து - பலி எண்ணிக்கை 31ஆக உயர்வு...!
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விழாவில் சிலிண்டர் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் வெடித்து 31 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்ர், ஷேர்கரின் புங்ரா கிராமத்தில் திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மணமகனின் உறவினர்கள் 4 பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயங்கள் அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் விபத்தில் சிக்கியர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்கள் அடுத்தடுத்து பலியாயினர். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதில் சோகம் என்னவென்றால், மணமகன் சுரேந்திர சிங்கின் பெற்றோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர ரத்தோர் மகாத்மா காந்தி மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விழாவில் சிலிண்டர் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.