அமைச்சர் - எம்.பி இடையே மோதல் - கலெக்டரை கீழே தள்ளியதால் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Tamil nadu Ramanathapuram
By Vinothini Jun 18, 2023 09:10 AM GMT
Report

தி.மு.க அமைச்சர் மற்றும் எம்.பி இடையேயான மோதலில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

fight-between-minister-and-mp-someone-pushed-ias

அது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்தனர்.

தகராறு

இதனை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி வந்தார். அப்போது அவர் தான் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கியது ஏன்? என்று கேட்டார்.

பின்னர் திடீரென அமைச்சருக்கும் எம்.பி க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை சமாதானம் செய்ய மாவட்ட ஆட்சியர் முயன்றார், அப்பொழுது அங்கு இருந்த ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தார். மேலும், இந்த வாக்குவாதம் தொடர்பாக ஆட்சியர், தலைமை செயலரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு சூழல் ஏற்பட்டது.