கல்லூரி பஸ்சுக்குள் தகராறு.. சைக்கோ போல் மாறிய ஜூனியர் மாணவரின் வெறிச்செயல் - கொடூரம்!

Attempted Murder Crime Karur
By Vinothini Nov 27, 2023 07:36 AM GMT
Report

ஜூனியர் மாணவர் சீனியரை கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகராறு

கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு சுற்றி உள்ள திருச்சி, தொட்டியம், முசிறி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்காக கல்லூரி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் 19 வயதான இவர் 3-ம் ஆண்டும், தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

college students fight

இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அது அதிகரித்ததும் மோதல் உருவானது. அப்பொழுது இருவரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர், மற்ற மாணவர்கள் தடுக்க முயன்றும் தடுக்கமுடியவில்லை.

விடாத ரீல்ஸ் மோகம்.. கண்டித்தும் கேட்காத மனைவி, இறுதியில் கணவன் செய்த செயல் - அதிர்ச்சி!

விடாத ரீல்ஸ் மோகம்.. கண்டித்தும் கேட்காத மனைவி, இறுதியில் கணவன் செய்த செயல் - அதிர்ச்சி!

வெறிச்செயல்

இந்நிலையில், அந்த ஜூனியர் மாணவர் ஆத்திரத்தில் தன்னிடம் வைத்திருந்த கத்தியை எடுத்து சீனியர் மாணவரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அந்த மாணவர் அலறியப்படி கீழே விழுந்தார், சக மாணவர்கள் கூச்சலிட்டனர். உடனே பஸ் டிரைவர் வண்டியை நேராக அருகில் இருந்த குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

college students fight

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அதில் ஜூனியர் மாணவரான அண்ணாமலை சைக்கோ போன்று நடந்து கொண்டதாகவும்,

இதனால் நிதிஷ்குமார் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் நிதிஷ்குமாரின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.