உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த கத்தார் செய்த செலவு - எச்சரிக்கும் தரவுகள்!

Foosball Qatar FIFA World Cup Qatar 2022
By Sumathi Nov 21, 2022 05:33 AM GMT
Report

பிபா கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்த கத்தார் நாடு 220 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது.

FIFA உலக கோப்பை 

பிபா கால்பந்து உலக கோப்பை இன்று தொடங்கி வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். கத்தார் நாடு இந்த கால்பந்து உலக கோப்பை போட்டியை நடத்த மிக பிரமாண்டமாக செலவு செய்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த கத்தார் செய்த செலவு - எச்சரிக்கும் தரவுகள்! | Fifa World Cup Qatar Inves Huge Amount

ஆறு புதிய கால்பந்து மைதானங்கள் புதுப்பிக்கப்பட்ட பயிற்சி தளங்கள் என 10 பில்லியன் டாலரில் மிக பிரமாண்டமாக கட்டியுள்ளது. மீதமுள்ள சுமார் 210 பில்லியனில் விமான நிலையங்கள், புதிய சாலைகள், ஹோட்டல்களுடன் கூடிய புதுமையான மையங்கள் மற்றும்

லட்சம் கோடி செலவு

அதிநவீன நிலத்தடி போக்குவரத்து உள்ளிட்டவைக்கு செலவு செய்துள்ளதாக அமெரிக்க விளையாட்டு நிதி ஆலோசனை நிறுவனமான Front Office Sports தெரிவித்துள்ளது. கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக செலவு செய்யப்பட்ட தொடர் இதுதான்.

உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த கத்தார் செய்த செலவு - எச்சரிக்கும் தரவுகள்! | Fifa World Cup Qatar Inves Huge Amount

கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யா செலவு செய்ததை விட 15 மடங்கு அதிகம். பொருளாதார ரீதியில் கத்தார் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவது மிகவும் தவறான முடிவு எனப் பல பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக 2014 போட்டியை நடத்திய பிரேசில் மிக மோசமான பின்விளைவுகளைச் சந்தித்தது.

உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய நாடுகள் பெரும்பாலும் நட்டத்தையே அனுபவித்தன. குறிப்பாக 2010ல் தென்னாப்ரிக்க மக்கள் ஃபிஃபாவுக்கு எதிராக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ரஷ்யா வல்லரசுடு நாடாக இருந்தாலும் பின்னடைவையே சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.