உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக கோடிக்கணக்கில் செலவழித்த கத்தார் - ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டும் திருவிழா...!

Football Qatar FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Nandhini Nov 17, 2022 07:58 AM GMT
Report

வரும் 20ம் தேதி உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதால் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. வரும் 20ம் தேதி கத்தார்- ஈகுவடார் அணிகள் இரவு 9.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன.

fifa-world-cup-2022-foot-ball-qatar-viral-video

களைக்கட்டும் கத்தார் - ஆட்டம், பாட்டத்தில் ரசிகர்கள்

வரும் 20ம் தேதி நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக கத்தார் விழாக் கோலம் பூண்டுள்ளது.

பல இடங்களில் உலக கோப்பை வீரர்களின் புகைப்படங்கள், ராட்சத கால்பந்துகள் மற்றும் உலக கோப்பை மாதிரிகள், விளம்பர பலகைகள் உலக மக்களின் கண்ணை கவர்ந்து வருகிறது.

இஸ்லாமிய தேசமான கத்தாரில் சட்டதிட்டங்கள் கடுமையாக உண்டு. ஆனால், கால்பந்து போட்டியால், வெளிநாட்டு ரசிகர்களுக்காக அவை கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளன.

போட்டிக்கு முன்பாக மற்றும் போட்டி நிறைவடைந்த பிறகு மைதானத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மதுபானங்கள் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியை நேரில் ரசிக்க சுமார் 15 லட்சம் ரசிகர்கள் கத்தாருக்கு படையெடுக்க உள்ளனர். ரசிகர்களின் கொண்டாட்டத்துக்காக கத்தாரில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மெகாதிரையில் போட்டியை பார்த்து ரசிக்கலாம். இசை கச்சேரி, ஆட்டம், பாட்டம் என்று 29 நாட்களும் உற்சாக வெள்ளத்தில் மிதக்கலாம்.

இப்போட்டிக்காக கத்தாரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இது உலக வரலாற்றில் அதிக தொகை செலவிடப்பட்ட போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.