மெஸ்ஸி அடைந்த மைல்கல் - காலிறுதியில் கால் வைத்த அர்ஜென்டீனா!

Lionel Messi Argentina FIFA World Cup Qatar 2022
By Sumathi Dec 04, 2022 06:29 AM GMT
Report

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, அர்ஜென்டீனா அணி காலிறுதிக்குச் சுற்றுக்கு முன்னேறியது.

மெஸ்ஸி

கத்தார் நாட்டில் கடந்த நவ. 20ஆம் தேதியில் இருந்து பிபா உலகக்கோப்பை 2022 தொடர் நடைபெற்று வருகிறது. ரவுண்ட் ஆப் 16 போட்டியில், நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா அணியை, ஆஸ்திரேலியா சந்தித்து.

மெஸ்ஸி அடைந்த மைல்கல் - காலிறுதியில் கால் வைத்த அர்ஜென்டீனா! | Fifa World Cup Argentina Steps Into Quaterfinals

அர்ஜென்டீனா அணி குரூப் சுற்றின் முதல் போட்டியில், கத்துக்குட்டி சவுதி அரேபியாவிடம் உதை வாங்கினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. தொடர்ந்து, கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளை சேர்த்து, சீனியர் கால்பந்து அரங்கில்,

 காலிறுதியில் அர்ஜென்டீனா

மெஸ்ஸி தனது 1000ஆவது போட்டியில் விளையாடினார். போட்டியின் 35ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய மெஸ்ஸி, தனது உலகக்கோப்பை வரலாற்றி முதல்முறையாக நாக்-அவுட் சுற்றுகளில் கோல் அடித்துள்ளார்.

மெஸ்ஸி அடைந்த மைல்கல் - காலிறுதியில் கால் வைத்த அர்ஜென்டீனா! | Fifa World Cup Argentina Steps Into Quaterfinals

மேலும், இது அவரது 94ஆவது சர்வதேச கோலாகும். மெஸ்ஸியின் கோலால், அர்ஜென்டீனா 1-0 என்ற கணக்கில் முதல் பாதியில் முன்னிலை பெற்றது. 2-1 என்ற கோல் கணக்கில், அர்ஜென்டீனா கடைசிவரை போராடி தனது வெற்றியை பதிவுசெய்தது. அர்ஜென்டீனா அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறியது.