உலக கோப்பை கால்பந்து தொடர் - ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி...!
உலக கோப்பை கால்பந்து தொடரில் ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்துள்ளார் மெஸ்ஸி.
கால்பந்து உலக கோப்பை தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.
உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
மெக்சிகோவை வீழ்த்திய அர்ஜெண்டீனா
நேற்று நள்ளிரவில் லுசைல் மைதானத்தில் 'சி' பிரிவில், அர்ஜெண்டீனா மற்றும் மெக்சிகோ அணிகள் நேருக்கு நேர் மோதின. போட்டி தொடங்கியதிலிருந்து பரபரப்பாக காணப்பட்டது. இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது, திடீரென அர்ஜெடீணா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அபாரமாக அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜெண்டீனா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக 2-வது கோலை அடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து, அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி
இப்போட்டியில், கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி உலக கோப்பை வரலாற்றில் தனது 8-வது கோலை பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் உலக கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இப்பட்டியலில் அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா முதல் இடத்தில் (10 கோல்கள்) உள்ளார்.
Football Legends at the #WorldCup:
— Barça Worldwide (@BarcaWorldwide) November 27, 2022
Lionel Messi: Diego Maradona:
?21 Games ?21 Games
?8 Goals ?8 Goals pic.twitter.com/XqGPSsoUGJ
Lionel Messi has scored 13 goals for Argentina in 2022, the most ever by an Argentine in a calendar year. The previous record, 12, was held by Lionel Messi and Gabriel Batistuta. Messi had scored 12 in 2012 for Argentina. ?? pic.twitter.com/5uYGavTgKL
— Roy Nemer (@RoyNemer) November 27, 2022