fifa: இன்னைக்கு தெறிக்கப்போகுது - களமிறங்கும் நட்சத்திர வீரர்கள்!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றும் 4லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
4லீக் ஆட்டங்கள்
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் குரூப் ஜி பிரிவில் உள்ள சுவிட்சர்லாந்து - கேமரூன் அணிகள் மோதுகின்றன. முதல் முறையாக இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதுகின்றன.
மாலை 6.30 மணிக்கு இரண்டாவது போட்டியில் குரூப் ஹெச் பிரிவில் இடம்பிடித்துள்ள உருகுவே - தென்கொரிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 11 வது முறையாக களமிறங்கும் தென் கொரியா தொடர்ந்து 10 முறை உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
வெயிட்டிங்
அதனைத் தொடர்ந்து, இரவு 9.30 மணிக்கு 3வது ஆட்டத்தில் குரூப் ஹெச் பிரிவில் இடம்பிடித்துள்ள ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி - கானா அணியை எதிர்கொள்கிறது. மேன்யு கிளப் அணியிலிருந்து வெளியேறிய தலைசிறந்த நட்சத்திர வீரர் ரொனால்டோவின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்துள்ளனர்.
இறுதியில், நள்ளிரவு 12.30 மணிக்கு நெய்மரின் பிரேசில் அணி - - செர்பியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதற்குமுன் 2 முறை 2 அணிகளும் உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இரண்டிலும் பிரேசில் வெற்றி வாகை சூடியுள்ளது. சுவாரெஸ், ரொனால்டோ மற்றும் நெய்மர் என நட்சத்திர வீரர்களின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
