ஒரே ஆண்டு தான்..!! அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதி-பழனிவேல் தியாகராஜன் உறுதி
தமிழகத்தில் ஓராண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதியை கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கம்
தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பு குறித்த 3 நாள் கருத்தரங்கு கூட்டம் சென்னை ஐ.ஐ.டி யில் நடைப்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினாராக தமிழக தொழில்நுட்பத்துறை கலந்துக்கொண்டார் பழனிவேல் தியாகராஜன்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் மக்களை சென்றடைவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மக்களிடம் தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெறுக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
ஒரே ஆண்டு தான்
அப்போது, அடுத்த ஒரு ஆண்டிற்குள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். முன்னதாக, ஐஐடி மெட்ராஸ் சார்பில் தொழில்நுட்ப இணையம் மற்றும் முதலீட்டாளர்கள் மையம் நேற்று துவங்கப்பட்டது.
இதில் புதிய தொழில்களுக்கான சிறந்த யோசனைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த நிபுணர்களின் பரிந்துரை ஆகியவையும் வழங்கப்பட்டது.இந்த மாநாட்டின் இறுதியில் புதிய தொழில் முனைவோர்களையும் முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளம் மெட்ராஸ் ஐஐடி சார்பில் நிறுவப்பட்டது.