திராவிடத்துக்குள் ஆன்மீகம் தான் இருக்கிறது...பிரித்துப் பார்க்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு..!!
திராவிடத்துக்குள் ஆன்மீகம் தான் இருக்கிறது என்று பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்துள்ளார்.
எ.வ. வேலு உரை
பழனி - தாராபுரம் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியை 106 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எ.வ. வேலு, "பெண்களைப் படி படி என்று சொன்ன இயக்கம் தான் திராவிட இயக்கம் என்று கூறி, பெண்களைப் படிக்க வற்புறுத்திய மும்மூர்த்திகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என்று சுட்டிக்காட்டி அந்த மும்மூர்த்திகளின் வடிவில் இருக்கிறார் தற்போதைய முதல்வர் என புகழாரம் சூட்டினார்.
பிரித்துப் பார்க்க முடியாது
அவர்களின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி உயர்கல்வி பயில்கிற பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதை சுட்டிக்காட்டி பேசிய அவர், திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது என்று தெரிவித்து, திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆன்மீகம் - திராவிடம் இரு சித்தாந்தங்களையும் வைத்து பலரும் பேசி, தங்கள் விமர்சனங்களையும் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.