கவனம்: சென்னையை உலுக்கும் மர்ம காய்ச்சல் - குழந்தைகளுக்கு குறி!
சென்னையில் ஒருவித மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மர்மக் காய்ச்சல்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மர்மக்காய்ச்சல் பரவி வருகின்றன. இதில் அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி, கண்வீக்கம், கண் வலி ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதனால் சென்னையில் சாதாரண கிளினிக் முதல் பெரிய மருத்துவமனைகள் வரை நோயாளிகள் நிரம்பி வழிந்து வருகின்றன . குறிப்பாக, எழும்புர் அரசு குழந்தைள் நல மருத்துவமனைள் நாள்தோறும் 85 முதல் 100 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.
குழந்தைகள் பாதிப்பு
‘பல வகையான காய்ச்சல் பரவி வருவதால் குழந்தைகளை பொது இடங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் .அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் , தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும்’ என சுகாதரத்துறை அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் , ஃப்ளு காய்ச்சல், மர்மக்காய்ச்ச்ல் மட்டுமல்லாமல் டைபாய்டு, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்ச்ல் தமிழகத்தில் பரவி வருகின்றன. எனவே மக்கள் குளிர்பானங்கள் போன்றவை தவிர்க்குமாறு மருத்துவர் அறிவித்துகிறார்கள் .