நாட்டை உலுக்கும் வைரஸ் தொற்று..பரவலைத் தடுக்க வினோத திருவிழா - எங்க தெரியுமா ?

Virus Tirunelveli Medicines
By Vidhya Senthil Dec 22, 2024 12:30 PM GMT
Report

வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க திருவிழா நடத்தப்படுவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வைரஸ் தொற்று

உலகளவில் இன்றைய கால நிலை மாற்றத்தால் பல நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா, உகாண்டா,பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. ஆனால் வெளிநாடுகளைவிட இந்தியாவில் வைரஸ் பரவுதல் மிகவும் குறைவுதான்.

நாட்டை உலுக்கும் வைரஸ்

வைரஸ் தொற்றுகள் பரவாமல் இருக்கப் பல உலக சுகாதார அமைப்பு முதல் உள்ளூர் மருத்துவம் வரை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுதான் வருகின்றன.ஆனால், தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க வினோத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு - அனைவருக்கும் இலவசமாக வழங்க அரசு திட்டம்

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு - அனைவருக்கும் இலவசமாக வழங்க அரசு திட்டம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தெற்கு பஜாரில் தங்கம்மன் கோவிலில் உள்ளது.இந்த கோவிலில் திருவிழாவின் போது பக்தர்களுக்குப் பிரசாதமாக கூல் வழங்கப்படுகிறது. இதில் கூழில் சீரகம், வெங்காயம் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

 திருவிழா

பானக்கரயத்தில் ஏலக்காய், சுக்கு, மிளகு உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன.இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்திகள் வலுப்பெற்று வைரஸ் பரவுதலிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்று கூறுகின்றனர்.

தொற்று பரவலைத் தடுக்க திருவிழா

முன்னதாக காலரா, டைபாய்டு போன்ற வைரஸ் தொற்று பரவி வந்தன. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற திருவிழாக்களை முன்னோர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.