தீவிரமாக பரவும் மர்ம நோய்..கொத்து கொத்தாக மடியும் மனித உயிர்கள்!
காங்கோவில் மர்ம நோய்யால் இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கோ
மத்திய ஆபிரிக்கா காங்கோவில் பெயர் அறியப்படாத நோய் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மர்ம நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டைப் புண், கண்களில் நீர் வடிதல்,காய்ச்சல் , போன்றவை ஏற்படுகிறது. மேலும் உணவில் சுகாதாரம் இல்லாமல் போனால் இந்த நோய் ஏற்படலாம்.
மர்ம நோய்
இது சாதாரண காய்ச்சல் போலத் தான் தெரிகிறது. இதற்கு மருந்து எடுத்துக் கொண்டால் அவ்வளவு எளிதில் சரியாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நோயால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
காங்கோவில் சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லை .குறைந்த தடுப்பூசி கவரேஜ், சரியான டெஸ்டிங் முறைகள் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து காங்கோவில் உள்ள கிராமங்களில் நோய் பரவல் ஏற்பட்டு உள்ளது.