செவ்வாய் கிரகம் சிவப்பு நிறமாக இருக்க இதுதான் காரணமாம் - பூமிக்கு வரும் மாதிரிகள்!
செவ்வாய் கிரகம் குறித்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
செவ்வாய் கிரகம்
சூரிய குடும்பத்தில் உள்ள நான்காவது கோளாகச் செவ்வாய்க் கிரகம் உள்ளது. இது பூமிக்கு மிக அருகில் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் போபோஸ் மற்றும் டீமோஸ் என்ற இரண்டு சிறிய துணைக்கோள்கள் உள்ளன.மேலும் செவ்வாய் கிரகம், சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், சிவப்புக்கோள் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் செவ்வாய் கிரகம், சிவப்பு நிறத்தில் இருப்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராகவே இருந்து வந்தது.இதற்குக் காரணம், செவ்வாய் கிரகத்தில் மேற்பரப்பில் திரவ நீர் இல்லாததால், கிரகத்தின் சிவப்பு நிறம் ஹெமடைட் போன்ற உலர்ந்த இரும்பு ஆக்சைடுகளிலிருந்து வந்தது என்று நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்தது.
ஆனால் தற்பொழுது உண்மையான காரணம் என்ன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Nature Communications என்ற இதழில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’’தண்ணீரைக் கொண்ட ஃபெரிஹைட்ரைட் இரும்பு ஆக்சைடு செவ்வாய் கிரகம் முழுவதும் பரவியுள்ளது.
புதிய தகவல்
இதன் காரணமாக இவை துருப்பிடித்து ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதாக விஞ்ஞானிகள்’’தெரிவித்துள்ளனர். மேலும் செவ்வாய் கிரகத்தின் டெரகோட்டா வகையிலான மேற்பரப்பு ஃபெரிஹைட்ரைட் என்ற கனிமம், குளிர்ந்த நீரால் உருவாகிறது.
இவை வறண்ட கிரகமாக மாறுவதற்கு முன்பு தண்ணீரைத் தாங்கும் திறன் கொண்டதாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொள்ள நாசாவின் Perseverance ரோவர் மூலம் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.