மிஸ் இந்தியா பட்டத்தை தட்டித்தூக்கிய சினி ஷெட்டி!

Karnataka India Viral Photos
By Sumathi Jul 04, 2022 09:16 AM GMT
Report

21 வயது அழகி சினி ஷெட்டி, ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

சினி ஷெட்டி

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 21 வயது சினி ஷெட்டிக்கு, கடந்த ஆண்டு அழகிப் பட்டம் மிஸ் இந்தியா 2021 மானசா வாரணாசி கிரீடம் சூட்டினார்.

shini shetty

ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபால் ஷெகாவத், முதல் ரன்னர் அப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான், இரண்டாவது ரன்னர் அப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜியோ வேர்ல்ட்

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேஹா தூபியா, மலைக்கா அரோரா, டினோ மோரியா, ஆடை வடிவமைப்பாளர்கள் ரோஹித் காந்தி மற்றும் ராகுல் கண்ணா,

மிஸ் இந்தியா பட்டத்தை தட்டித்தூக்கிய சினி ஷெட்டி! | Femina Miss India 2022 Crown Winner Sini Shetty

நடன இயக்குனர் ஷியாமக் தாவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு அழகிகளை தேர்ந்தெடுத்தனர். பாலிவுட் நட்சத்திரங்கள் நிறைந்த விழாவில்,

பாலிவுட் நட்சத்திரங்கள்

நேஹா தூபியா, ராஜ்குமார் ராவ், மணீஷ் பால் என நட்சத்திரங்கள் டினோ மோரியா, மிதாலி ராஜ் மற்றும் மலைக்கா அரோரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தியேட்டர், ஜிம் உடன் கூடிய பிரம்மாண்ட பங்களா கட்டும் நயன்.. எங்கு? எத்தன கோடி தெரியுமா?