குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருவது எப்படி? பாடம் நடத்திய பெண் யூடியூபர் கைது!
பாலியல் தொல்லை அளிப்பது குறித்து வீடியோ வெளியிட்ட பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் யூடியூபர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் வசித்து வருகிறார் சிக்கா மெத்ரே என்ற பெண் யூடியூபர். இவர் 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். இந்த சேனலுக்கு சுமார் 20,50 சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். அதில் இதுவரை 115 வீடியோக்களை அவர் பதிவேற்றியுள்ளார்.
சிக்கா வெளியிட்டுள்ள அந்த வீடியோக்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அவர்களுடன் பாலியல் உறவு வைப்பதை ஊக்கவிக்கும் விதமாக பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக செயற்பாட்டாளர் நாராயண் பரத்வாஜ் என்பவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் பரத்வாஜ், இந்த வீடியோக்கள் மூலம் மெத்ரே இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டதற்கு பிறகு மெத்ரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சிக்கா மெத்ரேவிடம் இருந்து லேப்டாப் மற்றும் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவரது யூடியூப் சேனலையும், சமூக வலைதளக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர்.
மேலும், சிக்கா மெத்ரா மீது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிக்கா மெத்ரே இத்தனை நாள் சிக்காமல் இருந்ததற்கு காரணம்
அவர் தனது யூடியூப் பக்கத்தை பிரைவேட் மோடில் வைத்து இருந்தது தான் எனவும் தெரியவந்துள்ளது. இவர் டெல்லியில் அமைந்துள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.