காப்பகத்தில் உள்ள சிறுவனுக்கு பாலியல் தொல்லை - 28 வயது இளம்பெண் செய்த கொடூரம் !
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை பல்லவராயன்பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி முனீஸ்வரி (28) என்பவர் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த சூழலில், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இளம்பெண்
அதில் ஒரு 10 வயதுள்ள சிறுவன் காப்பகத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்படைந்துள்ளது. இதனையடுத்து, அந்த சிறுவனிடம் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் விசாரித்தார்.
அப்போது காப்பக நிர்வாகியான முனீஸ்வரி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை தருவதாக கூறினான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், அதிகாரிகள் காப்பகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் காப்பக நிர்வாகி மீதான குற்றசாட்டு உறுதியானது. இதை தொடர்ந்து, அதிகாரிகள் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரி அளித்து, முனீஸ்வரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர்.