அவ்வளவு பாதுகாப்பையும் மீறி.. புழல் சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓட்டம் - 2 காவலர்கள் சஸ்பெண்ட்!
புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு வழக்கு
கர்நாடகா, பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி(32). இவர் சென்னை, செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் போலீஸால் கைது செய்யப்பட்டு,
புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறை கைதிகளுக்கு வழங்கும் வழக்கமான பணிக்குப் பிறகு கைதிகள் பதிவேட்டை சரிபார்த்த போது, ஜெயந்தி மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது.
கைதி தப்பியோட்டம்
உடனே, காவலர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்த நுழைவாயில் வழியாக ஜெயந்தி தப்பி ஓடியது தெரியவந்தது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறை வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா இருவரும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.