சிறையில் கொலையாளியுடன் காதல் - குழந்தையை பெற்றெடுத்த பெண் சிறை அதிகாரி!
பெண் சிறை அதிகாரி, கொலையாளியைக் காதலித்து குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறை அதிகாரி
பிரிட்டனைச் சேர்ந்தவர் கேத்ரின்(29). இவர் சிறை அதிகாரியாக இருந்துள்ளார். இவர் சிறையில் இருந்த கொலையாளி ஒருவரை விரும்பியுள்ளார். அதனால் அவருக்கு பல உதவிகளையும் செய்துள்ளார். கொலையாளியை வேறு சிறைக்கு மாற்றிய போதும், வேறு பெயருடன் அவரை சந்தித்து வந்துள்ளார்.

அதன்பின், அந்த குற்றவாளியின் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதனால், இவர்களுக்கு இடயே உள்ள உறவு சிறையில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கைதிக்கு உதவியதாக அவருக்கு 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கைதியுடன் காதல்
மேலும், மற்றொரு நீதிமன்றம் அந்த குழந்தையைப் பராமரிக்க சிறை அதிகாரிக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. தொடர் விசாரணையில், பெண் அதிகாரி கேத்ரின், கைதிக்கு தகாத முறையில் உதவி செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அவர் கைதியின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். கைதியிடம் மொபைல் போன் இருந்தது என்பதை அறிந்திருந்த கேத்ரின் அதை சிறை நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, அவரது பாதுகாவலாரிக் கொன்றுள்ளார்.
மேலும், 54 வயது பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலை செய்துள்ளார்.
இது தவறு என்பதை அறிந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பியுள்ளார். ஆனால் தனது காதலை எண்ணி பயத்தில் ராஜினாமா செய்யவில்லை என கூறப்படுகிறது.