7 அடி முள்படுக்கையில் படுத்துக்கொண்டு அருள்வாக்கு கூறிய பெண் சாமியார் - வைரலாகும் Video!
பெண் சாமியார் ஒருவர் முள்படுக்கையில் படுத்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முள் படுக்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இங்கு கடந்த கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல பூஜை விழா தொடங்கியது. அப்போது கோயில் அருகே காற்றாலை முள், இலந்தை முள், உடை முள்களால் 7 அடி உயரத்துக்கு முள் படுக்கை அமைக்கப்பட்டது.
அருள்வாக்கு
அந்த முள் படுக்கையில் கோயில் நிர்வாகி நாகராணி அம்மையார் ஏறி நின்று சாமியாடியும், முள்களில் படுத்துக்கொண்டும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
அப்போது அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்ட பக்தர்களும் அவரிடம் அருள்வாக்கு பெற்றனர். நாகராணி அம்மையார் தனது சிறுவயதிலிருந்தே 46 ஆண்டுகளாக மண்டல பூஜையின்போது கோயிலில் முள் படுகையில் அமர்ந்து அருள்வாக்கு கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முள் படுக்கையில் நடனமாடி அருள்வாக்கு !
— arunchinna (@arunreporter92) January 3, 2024
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 7 அடி உயர முள் படுக்கையில் நடனமாடியும், படுத்தும் அருள்வாக்கு சொல்லிவரும் பெண் சாமியார்; இவரது அருள்வாக்கை கேட்க பல மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துவருகின்றனர்.@LPRABHAKARANPR3 @abplive pic.twitter.com/GLKPEJoQC4